HomeCinemaஇந்திய வசூல் 100 கோடி! உலகளவில் அடுத்தடுத்த சாதனைகளுக்கு தயாராகும் ஷாருக்கானின் ‘டங்கி.'

இந்திய வசூல் 100 கோடி! உலகளவில் அடுத்தடுத்த சாதனைகளுக்கு தயாராகும் ஷாருக்கானின் ‘டங்கி.’

Published on

ஷாருக்கான் நடிக்க, ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘டங்கி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வகையில் தனது முத்திரையை பதித்துள்ளது.

இதயத்தை வருடும் கதையுடன் படம் பார்வையாளர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் முதல் தேர்வாகவும் இப்படம் அமைந்துள்ளது.

இந்த படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக அமைந்திருப்பதால்… அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் அதன் முத்திரையை பதித்த பிறகு, இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பிற்குள் நுழைந்து.. பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனை.. இந்தியாவில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே நடைபெற்றிருக்கிறது.

‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படம் – இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இது அவருடைய இந்த ஆண்டின் திரைப்பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

இத் திரைப்படம் சனிக்கிழமையன்று 29. 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமையன்று 30.25 கோடி ரூபாய்க்கு வசூல் செய்ததன் மூலம் அதன் மொத்த வசூல் 102.50 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரூ போன்ற மாநகரங்களில் குடும்ப பார்வையாளர்கள் ஏராளமாக திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இத்திரைப்படம்.. இந்தியாவின் வணிக வளாகங்களில் உள்ள மல்டி பிளக்ஸ்களில் தொடர்ந்து அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த ஷாருக்கானின் பத்தாவது திரைப்படமாக ‘டங்கி’ இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்திற்கான ஆதரவும், வரவேற்பும் நாள்தோறும் அதிக வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில்.. ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான வசூல் சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக திரையுலக வணிகர்கள் அவர்களுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this