HomeCinemaராதா மோகன் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது...

ராதா மோகன் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

Published on

யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ் ‘சட்னி – சாம்பார்.’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்துக்காக தயாராகும் இந்த சீரிஸில் யோகிபாபுவுடன் வாணி போஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், ஆர்.சுந்தர்ராஜன், குழந்தை நட்சத்திரங்கள் இளன், அகிலன், கேசவ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் தொடங்கி, அழுத்தமான கதையம்சத்தோடு நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இந்த சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினரான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில் அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப மற்ற நடிகர்கள் இருக்கின்றனர். ராதா மோகன் இயக்கம், யோகிபாபு நடிப்பு, வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என கூட்டணி பலமாக இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சீரிஸுக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியுள்ளார்.

கலை இயக்கத்தை கே கதிர் கவனிக்க, எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளார்.

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this