HomeMovie Reviewஅது வாங்குனா இது இலவசம் சினிமா விமர்சனம்

அது வாங்குனா இது இலவசம் சினிமா விமர்சனம்

Published on

‘தப்பு செய்தவனுக்கு தண்டனை நிச்சயம்’ என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கும் ‘அது வாங்குனா இது இலவசம்.’

கதையின் ஹீரோ விஜய் டிவி ராமர் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடுவதை பிழைப்பாகவும், அவர்களுடன் இணைந்து குடித்துக் கூத்தடிப்பதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் சில இளைஞர்கள் ஊரிலுள்ள காதல் ஜோடிகளை தூக்கிப்போய் கொடுமைப்படுத்தி கொன்று திருப்தியடைகிறார்கள்.

அந்த இரு தரப்பிலிருந்தும் ஒவ்வொருவராக உயிரிழக்கிறார்கள். கதை இப்படி நகர, அவர்களை அவர்களால் பாதிக்கப்பட்ட யாரோ பழிவாங்குகிறார்கள் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. அது யார் என்பதை கடைசிவரை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பான கிரைம் திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ் கே செந்தில்ராஜன்.

குடிபோதையில் மன்னர் போல் கனவு கண்டு ஆடிப்பாடுவதில் தொடங்கி, பெண் வேடத்திலிருக்கும்போது பாலியல் தொல்லைக்கு ஆளாகி சின்னாபின்னமாவது வரை ரசித்துச் சிரிக்க வைத்திருக்கிறார். நிர்வாணமாக வயல்வெளியில் ஓடும் காட்சி ரகளை.

அழகாக இருக்கிற பூஜாஸ்ரீயின் தேகத்தில் இளமைத் துடிப்பும் நடிப்பில் துறுதுறுப்பும் கலந்திருக்கிறது. அவர் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும்போது அவரா இவர் என ஆச்சரியப்படுப்படுத்துகிறார்.

சூப்பர் குட் சுப்பிரமணி, கலையரசன் என பரிச்சயமான நடிகர்களுடன் மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி என மற்றவர்கள் ஏற்ற பாத்திரங்களுக்கு தேவையான நடிப்பைத் தந்து கடந்து போகிறார்கள்.

ராமருடன் ஜாலியாக ஆட்டம்போடும் பெண்கள் கவர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள்.

ஐட்டம் டான்ஸுக்கான பாடலை கிக்கான இசையில் கொடுத்து மற்ற பாடல்களை ஒருமுறை கேட்கும் ரகமாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் அர்வின் ராஜ். பின்னணி இசை பரவாயில்லை எனும் உணர்வைத் தருகிறது.

கதைக்களத்தைப் போலவே எளிமையான இருக்கிறது விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவு.

படு பயங்கரமான கிரைம் சப்ஜெக்ட் என்று நினைக்கும்படி ஆரம்பக் காட்சியில் அதிரடி, அதன் பிறகான கதையின் போக்கில் ராமரின் டெம்ப்ளேட் காமெடி என பயணித்து கிளைமாக்ஸில் பரபரப்பான திருப்பங்கள் என திரைக்கதையை யோசித்த இயக்குநர்,

மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அது வாங்குனா இது இலவசம், திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் வசூல் நிலவரம்.

Rating 2.5 / 5 

Latest articles

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

தனது பத்தாவது படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர்; கலைஞர்களிடமிருந்து நேர்த்தியாக தனக்கு தேவையானதை வாங்கி விடுகிறார்! –‘பிளாஸ்ட்’ பட விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் பேச்சு

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

More like this