HomeCinemaசமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்கப் போகிறேன்; அதற்கு முன்னோட்டமாக 'அகம் பிரம்மாஸ்மி' பாடலை உருவாக்கியுள்ளேன்! -சொல்கிறார் நடிகர்...

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்கப் போகிறேன்; அதற்கு முன்னோட்டமாக ‘அகம் பிரம்மாஸ்மி’ பாடலை உருவாக்கியுள்ளேன்! -சொல்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்

Published on

நடிகர் மன்சூர் அலிகான் சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்களைப் பயன்படுத்தி ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்பம் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார்.

அது குறித்து பேசிய மன்சூர் அலிகான், ”’ராஜாதி ராஜ ராஜ குலத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்தில் பாடல்கள், இசை, நான் அமைத்திருந்தேன். வாணி ஜெயராம், சந்திரபோஸ், சொர்ணலதா, டி.எஸ்.ராகவேந்தர் ஆகியோரை பாட வைத்திருந்தேன். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். ‘டிப் டாப் தமிழா’ ஆல்பம் இசையமைத்து வெளியிட்டேன்.

தமிழ் என் தாய் மொழி. மூத்த மொழி, தொன்மையான மொழி. கலைஞனுக்கு மொழி, இனம், நாடு வித்யாசம் கிடையாது. அந்த வகையில் சமஸ்கிருதத்தில் ஜதி பிடித்திருந்தது. பரதநாட்டியம், குச்சிப்புடி நடன அசைவுகளுக்கும், சிவ தாண்டவம் ஆடவும் சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. அதனால் ‘அகம் பிரம்மாஸ்மி’ இந்த ஆல்பத்தில் சமஸ்கிருதம் பயன்படுத்தி உள்ளேன். ஆல்பத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளேன். விரைவில் முழு ஆல்பம் வெளிவரும்.

முன்னணி நடிகர்களை வைத்து, முழுக்கமுழுக்க சமஸ்கிருதத்திலேயே ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். அந்தப் படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி சப் டைட்டிலில் வெளிவரும்” என்றார்.

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this