தீபாவளியன்று புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 9மணிக்கு ‘அலப்பறை கிளப்புறோம்’ என்ற கலகலப்பான கேம் ஷோ இடம்பெறுகிறது.
நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன் வைத்தியா, பாடகர் பாலா, கானா குரு, ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் புதுமுக கதாநாயகிகள் ஆராதியா மற்றும் பாடினி குமார் ஆகியோரும் இணைந்து கலாய் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள். ஆட்டம், பாட்டம் என அதிரடி அலப்பறையால் பார்வையாளர்களை ரசிக்க வைக்கவிருக்கிறார்கள்.
நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் சோனி தொகுத்து வழங்குகிறார்கள்.