HomeCinemaஇந்த படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது! -'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் தன்னுடைய கதாபாத்திரம்...

இந்த படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது! -‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி சொல்கிறார் சரத்குமார்

Published on

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கியுள்ள மழை பிடிக்காத மனிதன்’ படத்தில், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிற சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி சரத்குமார் பேசியபோது  “விஜய் மில்டனின் முந்தைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெவ்வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். இருப்பினும், அவர் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது என்பதை உணர முடிந்தது. எனது பகுதிகளுக்கு டப்பிங் செய்யும்போது, எனக்கு கதை சொல்லப்பட்டதைவிட திரைக்கதையில் இன்னும் வலுவாக இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

விஜய் மில்டனுடன் பணிபுரிந்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தனக்கு என்ன வேண்டும் என்ற துல்லியமான திட்டமிடலும் செயல் வடிவமும் இருந்ததால் முழு படப்பிடிப்பும் இலகுவாக சென்றது. எதிர்காலத்தில் விஜய் மில்டனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். சவாலான காட்சிகளைத் தன் நடிப்பால் மெருகேற்றும் ஒரு அற்புதமான மற்றும் திறமையான நடிகர் விஜய் ஆண்டனி” என்றார்.

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this