HomeCinemaஉஸ்தாத் ராம் பொதினேனி நடிக்கும் 'ஐஸ்மார்ட்’ படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

உஸ்தாத் ராம் பொதினேனி நடிக்கும் ‘ஐஸ்மார்ட்’ படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

Published on

உஸ்தாத் ராம் பொதினேனி நடிக்க, பூரி ஜெகன்நாத் இயக்கும் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும் அதன் துடிப்பான பீட்ஸ் கூடுதல் பலம். கேட்பவர்களுக்கு அதீத எனர்ஜி கொடுக்கும் வகையிலான இசைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச், தனுஞ்சன் சீபனா மற்றும் கீர்த்தனா ஷர்மா மூவரும் இந்தப் பாடலை எனர்ஜியாகப் பாடியுள்ளனர்.

ராம் மிகவும் எனர்ஜிடிக்காக நடனம் ஆடி பார்ப்பவர்களுக்கும் அந்த எனர்ஜியை கடத்துகிறார். அவருடைய ஹூக் ஸ்டெப்பும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. விறுவிறுப்பான செட்களில் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு ராம் ஜோடியாக காவ்யா தாப்பர் நடனமாடி ஈடுகொடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் பார்ட்டியில் நிச்சயம் இந்தப் பாடல் அனைவருக்கும் முதன்மை தேர்வாக இருக்கும்.

பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் ஒரு வலுவான கதாபாத்திரத்திலும், காவ்யா தாபர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாண்டுள்ளனர்.

Latest articles

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ரசிக்கும்படியான படம் என்று சொல்லலாம். அப்படியான சாகசங்கள் நிரம்பிய அனிமேஷன் ஃபேண்டஸி படம். லின்...

புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

More like this