HomeCinemaநண்பர்கள் தினத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு.'

நண்பர்கள் தினத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு.’

Published on

நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ நண்பர்கள் தினத்தையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது. வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நட்பு பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் பரிசு என்று கூறியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் தனது சொந்த நண்பர்களின் முக்கியத்துவத்தை சிலாகித்துப் பேசியிருக்கிறார். மேலும், இந்தப் படத்தின் பின்னால் உள்ள இளம் நண்பர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். “நட்பிற்காக இந்தப் படத்தில் இணைந்தேன். நட்பின் சாரத்தை இப்படம் கொண்டாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

உலக நண்பர்கள் தின வார இறுதியில் படத்தின் வெளியீட்டுத் தேதி அமைந்திருப்பது பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி, வாழ்க்கை மற்றும் நட்பின் கொண்டாட்டத்தை கொடுக்க இருக்கும் ‘NOVP’ படத்தில் வேலை செய்த ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Latest articles

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நடிகர் பினு. டி. ஜான் போஸ்கோ… திரைப்பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து உற்சாகம்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து  பதினொன்றாம்...

புராண கால வரலாற்று பின்னணியில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் ‘பகவான்’ வெளியீட்டுக்கு தயாராகிறது!

வித்தியாசமான கதையம்சத்துடன்,  சு.காளிங்கன் இயக்கியுள்ள திரைப்படம் 'பகவான்.' ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார்....

கலக்கல் ஹிட்டான ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள் கொரியன் ஃபேமிலி சாங் ‘ரா ரா ரங்கையா.’

https://www.youtube.com/watch?v=e-uMIm-Yxhk பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள்...

More like this