HomeCinemaஆகஸ்ட் 2-ல் பிக்சர் பாக்ஸ் கம்பெனி வெளியிடும் ஜமா!

ஆகஸ்ட் 2-ல் பிக்சர் பாக்ஸ் கம்பெனி வெளியிடும் ஜமா!

Published on

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படத்தை லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக பரிசீலனையில் இடம்பெற்றது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் ‘ஜமா’ என்ற மற்றொரு அற்புதமான படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது. பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்து விநியோகித்த பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் இந்த படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார்.

பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் அலெக்சாண்டர் கூறுகையில், “பிக்சர் பாக்ஸ் கம்பெனி, அழகியலோடு வணிகரீதியான வெற்றிகரமான உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கவே விரும்புவோம். இது போன்ற திரைப்படங்கள் வருவது அரிது. ‘ஜமா’ இதுபோன்ற நல்ல கதையைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை கவருவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் ‘ஜமா’ கொண்டுள்ளது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ‘கூழாங்கல்’ போன்ற அற்புதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் கைக்கோத்திருப்பது எங்களுக்கு பெருமை. படத்தை கணிசமான எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிட உள்ளோம் மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி படம் வெளியாவதால் விரைவில் புரோமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளோம்” என்றார்.

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

More like this