HomeCinemaசென்னை ஆழ்வார்பேட்டை சாலை இனி 'கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு.' இயக்குநர் சிகரம் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு...

சென்னை ஆழ்வார்பேட்டை சாலை இனி ‘கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு.’ இயக்குநர் சிகரம் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு வழங்கிய கெளரவம்!

Published on

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 95’வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 9; 2024) சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், கே.பாலசந்தர் சாலை’ என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-ல் உள்ள லஸ் சர்ச் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, சுமார் 1000 சதுர அடி அளவில் அமையப் பெற்றுள்ள போக்குவரத்து தீவு என்று அமைந்துள்ள இடத்தினை, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்று பெயர் மாற்றம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் அவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்ற பெயரை சாலையில் நிறுவுவதற்கு முக்கியமாக முயற்சித்தவர்கள் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகருமான ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான பூச்சி எஸ்.முருகன், ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கவிதாலயா வீ.பாபு ஆகியோர் முக்கியமானவர்கள்.

09.07.2024 இன்று இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கே.பாலசந்தர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி, கேக் வெட்டி கொண்டாடினார்கள். இவ்விழாவில் பாரதிராஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் வீ.பாபு, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this