HomeCinemaமுதல் பாடலை வெளியிட்டு என் டி ஆரின் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய 'தேவரா' படக்குழு!

முதல் பாடலை வெளியிட்டு என் டி ஆரின் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய ‘தேவரா’ படக்குழு!

Published on

கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான ‘தேவரா பார்ட் 1’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாக படத்தில் இருந்து ‘ஃபியர் சாங்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அனிருத் பாடியிருக்க தெலுங்கில் சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி, தமிழில் விஷ்ணு எடவன், ஹிந்தியில் மனோஜ் முண்டாஷிர், கன்னடத்தில் வரதராஜ் மற்றும் மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலை எழுதியுள்ளனர். படத்தில் என்டிஆரின் மாஸ் மற்றும் பிறந்தநாளுக்கு இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வந்துள்ளது. அனிருத்தின் காந்த குரலும் என்டிஆரின் வலுவான திரையிருப்பும் ‘பயத்தின் கடவுள்’ என இந்தப் பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து ஒவ்வொரு ரசிகரையும் திருப்திப்படுத்தியுள்ளது.

பாடல் மற்ற மொழிகளிலும் பிரமிக்க வைக்கிறது. பாடல் வீடியோவில் அனிருத் ரவிச்சந்தர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பாடியிருக்கிறார். சந்தோஷ் வெங்கி கன்னடம் மற்றும் மலையாளத்தில் பாடியிருக்கிறார். ‘தேவரா’ படத்தின் புரோமோஷனுக்கு ‘ஃபியர் சாங்’ நல்ல தொடக்கம் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. உயர்தரமான தயாரிப்பு மதிப்புகள், ஈர்க்கும் காட்சிகள் மற்றும் பாடலில் என்டிஆரின் திரை இருப்பு ஆகியவை ஆல்பத்தின் மற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கதாநாயகனாக என்டிஆர் நடிக்க பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this