HomeCinema‘இந்த கிரைம் தப்பில்ல' சினிமா விமர்சனம்

‘இந்த கிரைம் தப்பில்ல’ சினிமா விமர்சனம்

Published on

‘ஆடுகளம்’ நரேன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல் சிலரை குறிவைத்து உயிரைப் பறிக்கிறது. செய்வது குற்றச் செயல்தான் என்றாலும் அது தப்பில்ல என்கிறார்கள். அப்படியானால் அவர்கள் கட்டம் கட்டுவது யாரை என்பதும், காரணமென்ன என்பதுமே கதை.

உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆட்களை வைத்து சிலரது உயிரைப் பறித்தாலும் அதிலும் முடிந்தவரை கெத்து காட்டியிருக்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரியாக வருகிற ‘ஆடுகளம்’ நரேன் .

தாங்கள் குறிவைத்தவர்கள் சிக்கியதும் அவர்களை தாக்கும்போது காட்டும் ஆத்திரத்தில் தனித்து தெரிகிறார் பாண்டி கமல்.

மூன்று இளைஞர்களை தன் காதல் வலைக்குள் விழவைக்கிற சம்பவத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார் அழகான, இளமையான மேக்னா! அவரிடம் வழிகிற இளைஞர்களின் நடிப்பும் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

முத்துக்காளை, வெங்கல் ராவ் என படத்தின் மற்ற நடிகர்கள் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்க தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

திரைக்கதையின் தேவையுணர்ந்து பின்னணி இசையமைத்திருக்கிறார் பரிமளவாசன்.

‘வாழத் தகுதியில்லாதவர்களை எந்த விதத்திலாவது உலகத்திலிருந்து அகற்றிவிட வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருப்பதற்காக இயக்குநர் தேவகுமாரை பாராட்டலாம். இப்படியான பாராட்டுக்கள் தரும் ஊக்கத்தோடு அடுத்தடுத்த படங்களை சிறப்பாக இயக்க வாழ்த்துகளும் தெரிவிக்கலாம்.

Latest articles

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் ‘மதுர மோசடி’ விரைவில் ரிலீஸ்!

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

More like this

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் ‘மதுர மோசடி’ விரைவில் ரிலீஸ்!

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...
‘ஆடுகளம்' நரேன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல் சிலரை குறிவைத்து உயிரைப் பறிக்கிறது. செய்வது குற்றச் செயல்தான் என்றாலும் அது தப்பில்ல என்கிறார்கள். அப்படியானால் அவர்கள் கட்டம் கட்டுவது யாரை என்பதும், காரணமென்ன என்பதுமே கதை. உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆட்களை வைத்து சிலரது உயிரைப் பறித்தாலும் அதிலும் முடிந்தவரை கெத்து காட்டியிருக்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரியாக வருகிற ‘ஆடுகளம்' நரேன் . தாங்கள்...‘இந்த கிரைம் தப்பில்ல' சினிமா விமர்சனம்