HomeCinemaமாறிவரும் சமுதாயத்தால் இளம் தலைமுறையினர் படும் அவலத்தை எடுத்துக்காட்டும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'...

மாறிவரும் சமுதாயத்தால் இளம் தலைமுறையினர் படும் அவலத்தை எடுத்துக்காட்டும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ அடுத்த மாதம் வெளியீடு!

Published on

சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக பயணத்தை தொடங்கிய பிரசாத் ராமர் இயக்கி, பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார் தயாரித்துள்ள படம் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’

செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரனும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் 2018-ல் தொடங்கியது. சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

படப்பிடிப்பு மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் நடந்துள்ளது. படம் வரும் மார்ச் மாதம் வெளிவருகிறது.

இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், தொழில்நுட்பக் குழுவில் ராதாகிருஷ்ணன் தனபால் (எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை), அமர்நாத் (டிஐ கலரிஸ்ட்), சதீஷ் சேகர் (டைட்டில் சிஜி), isquare மீடியா (ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன்), யாதவ் ஜேபி (டைட்டில் & போஸ்டர் டிசைன்ஸ்), ஜி.சுரேன் (ஒலிக்கலவை) மற்றும் ஜி.சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு).

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this