HomeCinemaஉதயம் தியேட்டர் இடிக்கப்படும் செய்தியால் இதயம் இடிபட்டது! -இயக்குநர் பேரரசு

உதயம் தியேட்டர் இடிக்கப்படும் செய்தியால் இதயம் இடிபட்டது! -இயக்குநர் பேரரசு

Published on

நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் ‘உதயம்.’ பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம்.

அதன் பிறகு உதவி இயக்குநராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான்.

நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது.

என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம்.

இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது.

உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும்,
இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்…
சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால்,
தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா?

சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர்

உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்…

-ரசிகன் பேரரசு

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

More like this