HomeCinemaஹனு மான் படத்தின் டிக்கெட் விற்பனையிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்க படக்குழு முடிவு!...

ஹனு மான் படத்தின் டிக்கெட் விற்பனையிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்க படக்குழு முடிவு! நடிகர் சிரஞ்சீவி பாராட்டு.

Published on

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஃபேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘ஹனு-மான்’ வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இந்நிலையில் படக் குழு தற்போது கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதில் ஒரு நிகழ்வாக ஹைதராபாத்தில் ஃபிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ”அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல் நிகழ்வாகும். இம்மாதம் 22 ஆம் தேதியன்று ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இதில் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வேன்.

‘ஹனு-மான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கவிருக்கிறோம். இந்த செய்தியை படக் குழு சார்பாக நான் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன்.

இத்தகைய உன்னதமான முடிவை எடுத்த ‘ஹனு-மான்’ படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த முடிவை திரையுலகினரும் ஆன்மீக அன்பர்களும் பாராட்டி வருகிறார்கள். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரவேற்பும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

Latest articles

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணையும் ‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani...

More like this