HomeCinemaதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

Published on

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள ‘ரூம் பாய்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஜெகன் ராயன் பேசியபோது, “நிறைய பேச மாட்டேன். திரைப்படத்தில்தான் பேசுவேன்.  இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்.

அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து 2004-ம் ஆண்டு மாநில விருதை பெற்றேன்.
சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார். எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது.
படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்றார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க் குமரன் பேசியபோது, “இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.
புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி” என்றார்.
நிகழ்வில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Latest articles

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

ரசிகர்களின் வரவேற்பில் பெரியளவில் ஹிட்டான ‘Lik’ படக்குழுவினரின் உற்சாக கொண்டாட்டம்!

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்...

More like this

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...