HomeCinemaஇந்த படம் மறக்க முடியாத கனவு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது! -பராசக்தி பட நாயகி நடிகை ஸ்ரீலீலா

இந்த படம் மறக்க முடியாத கனவு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது! -பராசக்தி பட நாயகி நடிகை ஸ்ரீலீலா

Published on

ஸ்ரீலீலா வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார்.

”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி.

சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல, அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது.

ரவி மோகனின் நடிப்பு எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘பராசக்தி’ படத்தில் அவரின் நடிப்பை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.

”நடிகர் அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்.

நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ஆர்யமாலா’வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. ’பராசக்தி’ படத்தில் இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு மிகவும் நன்றி. ’பராசக்தி’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this