HomeCinemaஎன் சம்பளத்தை நான் நிர்ணயிப்பதில்லை; எனக்கு தருவதாக சொன்ன சம்பளம் வருவதே இல்லை! -ஜோரா கைய...

என் சம்பளத்தை நான் நிர்ணயிப்பதில்லை; எனக்கு தருவதாக சொன்ன சம்பளம் வருவதே இல்லை! -ஜோரா கைய தட்டுங்க பட விழாவில் நடிகர் யோகிபாபு ஆதங்கம்

Published on

யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜாலக் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜோரா கைய தட்டுங்க.’

இந்த படம் வரும் மே 16-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விநீஷ் மில்லினியம், ”நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும். அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு.

ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும். மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி” என்றார்.

நடிகர் யோகிபாபு, ”தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் மது அம்பாட்,
நடிகர் அருவி பாலா, நடிகர் ஶ்ரீதர் கோவிந்தராஜ், எடிட்டர் சாபு ஜோசப்,
தயாரிப்பாளர் ஜாகிர் அலி , நடன இயக்குநர், நடிகை வசந்தி உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்கள்.

Latest articles

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

More like this