HomeGeneralகல்வித் துறையில் ரோபோடிக்ஸ்... மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி!

கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்… மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி!

Published on

கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலமாக புதிய புரட்சியை மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் திலிப் விளக்கியபோது,

ரோபாட்டிக்ஸ் மற்றும் STEM (Science, Technology, Engineering, Mathematics) கண்டுபிடிப்புகள் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பணியில் மைபோட் வென்ச்சர்ஸ் (MiBOT Ventures) ஈடுபட்டுள்ளது.

மைபோட், இந்தியாவிலிருந்து உலகிற்கு சிறந்த ரோபாட்டிக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட புதுமையான தீர்வு வழங்குநராக இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில், தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது அவசியம் மட்டுமல்ல தேவையும்கூட. அதனால்தான் MiBOT பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சென்று, வகுப்பறைகளை புதுமை மையங்களாக மாற்றும் ரோபாட்டிக்ஸ் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகிறது.

ஒரு மழலையர் பள்ளி மாணவர் தனது முதல் ரோபோவை அசெம்பிள் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் AI-இயங்கும் போட்டை புரோகிராமிங் செய்வதாக இருந்தாலும் சரி, இந்தியாவில் முதல் முறையாக, 43 கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைப்பான விருது பெற்ற ஃபின்னிஷ் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்ட பாடத்திட்டம் உள்ளது.

கல்வி துறையில் மட்டுமின்றி, மைபோட் வென்சர்ஸ் தொழில்நுட்பத்தை தொழில்களில் உள்ளே சென்று, தங்கள் செயல்முறைகளை துரிதப்படுத்தி, ஆட்டோமேஷன் மற்றும் புதுமையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், குழந்தைகளின் சிந்தனை திறனை மேம்படுத்தும் வகையில், சாஃப்வேர் மற்றும் ஹார்டுவேரும் இந்த வகுப்புகளின் மூலம் வழங்கப்படுகிறது.

மைபோட் நிபுணத்துவம் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் தீர்வுகளில், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில் வணிகங்கள் முன்னேற உதவுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற தொழில்களில், மைபோட் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. செயல்பாடுகளை நெறிப்படுத்துவதோடு ஆபத்தான சூழல்களில் அபாயங்களை குறைக்கிறது.

இதுவரை தயாரிக்கப்பட்ட போட்டுகளுடன் போட்டியிடும் வகையில் மைபோட் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை நிஜ உலக பிரச்சனைகளைத் தீர்க்க உதவக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளோம்.

மைபோட் வெஞ்சர்ஸ் இன்றைய நாளில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முனைவோராக உருவாகியிருக்கிறது என்றார்.

நிகழ்வில் இணை நிறுவனர் கலைக்கோவன் அந்தோணி, நிதி ஆலோசகர் லக்ஷ்மண் குமார் நாசர்புரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this