HomeCinemaவரலாற்றுக்கு முந்தைய ரகசியங்களை உடைத்து சிறந்த சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர்! 

வரலாற்றுக்கு முந்தைய ரகசியங்களை உடைத்து சிறந்த சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர்! 

Published on

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய இருப்பது குறித்து உற்சாகமாக உள்ளனர்.

பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய பிரபஞ்சத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

2 நிமிடம் 25 வினாடிகள் டிரெய்லரில் பல ஆக்‌ஷன் சாகசங்களும் திருப்பங்களுடன் கூடிய அறிவியல் கதையும் நிறைந்துள்ளது. திரைப்படம் ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Latest articles

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

More like this