HomeCinemaபாரதிராஜாவுடன் யோகிபாபு, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் இணையும் 'நிறம் மாறும் உலகில்'...

பாரதிராஜாவுடன் யோகிபாபு, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் இணையும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

இயக்குநர் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜெ பி இயக்கும் ‘ நிறம் மாறும் உலகில்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை- திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்கிறது படக் குழு.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

Latest articles

‘மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள...

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்தின்...

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...

More like this

‘மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள...

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்தின்...