HomeGeneralநாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் கலைக் குழுக்களுக்கும் பணமுடிப்பு வழங்கி ஊக்குவித்த வேலம்மாள் நெக்சஸின் வீதி விருது விழாவில்...

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் கலைக் குழுக்களுக்கும் பணமுடிப்பு வழங்கி ஊக்குவித்த வேலம்மாள் நெக்சஸின் வீதி விருது விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் திரைக் கலைஞர்கள் பங்கேற்பு!

Published on

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.

ஜனவரி 5 , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த பொருளாதார நலிவுற்ற சுமார் 7000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கு பெற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

பேரணியை ச. அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்களும் வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் எம்.வீ.எம். வேல்மோகன் அவர்களும் தொடங்கி வைத்தனர்.

கலைஞர்களின் பேரணி சென்னை, முகப்பேர்  மேற்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் தொடங்கி முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வரைக்கும் நடந்தது.

சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உரிய ஒப்பனைகளோடு கலைஞர்கள் வெளிப்படுத்திய பாரம்பரியக் கலைகளைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

முகப்பேர், வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களின் திருகரங்களால் 58 வயதிற்கு மேற்பட்ட நலிவுற்ற 100 மூத்தக் கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்தாயிரம் விதம் பணமுடிப்பு வழங்கப்பட்டது

நியூஸ் 7 முதன்மை ஆசிரியர்கார்த்திகைச்செல்வன் மற்றும்
நடிகர் ரமேஷ் திலக் ஆகியோரின் திருக்கரங்களால் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கலைக்குழுக்களுக்கு ஒவ்வொரு கலைக்குழுவுக்கும்
ரூபாய் 10,000 வீதம் பணமுடிப்பு வழங்கப்பட்டது.

விஜிபி குழுமத் தலைவர் சந்தோஷம் மற்றும் நடிகரும் இயக்குநருமான
போஸ் வெங்கட் ஆகியோரின்  திருக்கரங்களால் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பண முடிப்பும் நாட்டுப்புற வீரதீர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும்  உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்து இருந்தது.

இந்த விழா, நாட்டுப்புறக் கலைகளின் அழகையும் அரிய பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறவும்,  திறமையான கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும் முக்கிய தளமாகவும் அமைந்தது.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this