HomeCinemaஇந்த ஃபேமிலி ஆக்சன் டிராமா எல்லோருக்கும் பிடிக்கும்! -தென் சென்னை பட நிகழ்வில் இயக்குநர் ரங்கா...

இந்த ஃபேமிலி ஆக்சன் டிராமா எல்லோருக்கும் பிடிக்கும்! -தென் சென்னை பட நிகழ்வில் இயக்குநர் ரங்கா நம்பிக்கை 

Published on

அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘தென் சென்னை.’ ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா, விஷால், ராம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ரங்கா, ”தென் சென்னை படத்தைத் தயாரித்து, நடித்து இயக்கியுள்ளேன். ஃபேமிலி ஆக்சன் டிராமாவாக இப்படத்தை எடுத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். சின்ன வயசிலிருந்து கிரிக்கெட், சினிமா தான் எனக்குப் பிடித்த விசயம். இப்போது தான் படம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. கொரோனா காலத்தில் இந்த ஐடியா வந்தது. நண்பர்களின் உதவியால் இந்தப்படத்தை எடுத்துள்ளேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். என் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பெரும் ஆதரவாக இருந்தார்கள். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள்” என்றார்.

நடிகர் இளங்கோ குமணன், இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி என்னை பாரில் இருக்கும் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டேன். ஆனால் அவர் உங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்திருக்கிறேன் அதில் ஸ்டைலாக டிரெஸ்ஸிங் செய்வதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன் என்றார். ஒரு காட்சி எடுக்கும் முன், அதை நண்பர்களை வைத்து, போனில் எடுத்து, அதைக்காட்டி தான் எடுப்பார். அந்தளவு தயாராக இருப்பார். என்ன தேவையோ அதைச் சரியாக வாங்கி விடுவார். படக்குழு என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் நிதின் மேத்தா, கதை சொன்ன போது வில்லனாக இருந்தாலும் அது தனித்தன்மையோடு இருந்தது. எல்லா வில்லன்களும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக நல்லவர்கள். என்னை வில்லனாக நடிக்க வைப்பதில் வருத்தமில்லை, அதில் என் திறமையைக் காட்டி ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். இந்தப்படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரங்கா பற்றி எதுவுமே தெரியாது. அவர் புதுமுகமாக இருந்தாலும் அவர் என் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியபோது, அவரது உற்சாகம் எனக்குப் பிடித்திருந்தது. அவர் படத்தை மிக நன்றாக இயக்கியுள்ளார். எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாகப் படத்தை ரசிப்பார்கள்” என்றார்.

நாயகி ரியா, இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்வார், மிகப் பொறுமையாக எல்லாமே சொல்லித் தருவார். கேமரா மேன் சரத் எங்களை மிக அழகாகக் காட்டியுள்ளார். மொத்த டீமும் கடுமையாக உழைத்துள்ளனர் அனைவருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.

நடிகர் திலீபன், வத்சன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படம் டிசம்பர் 13-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...