மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் விருபக்ஷா, ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்ததையடுத்து தற்போது அறிமுக இயக்குநர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக பான் இந்திய வெற்றிப்படமான பிளாக்பஸ்டர் ஹனுமான் திரைப்படத்தை வழங்கிய பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட்டின் சார்பில், கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் சாய் துர்கா தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தயாரிப்பாளர்கள் ‘இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி’ என்ற தலைப்பில் ஒரு அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் வகையில், படத்தினைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஒரு நிலம் நீண்ட காலமாக தீய சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது, அதன் மீட்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த அற்புதமான உலகத்தை உயிர்ப்பித்திருக்கும் தயாரிப்புக் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளை, இந்த வீடியோ நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிரமிக்க வைக்கும் செட்கள், சிக்கலான வடிவம் கொண்ட ஆயுதங்கள் மற்றும் நடிகர்கள் பாத்திரங்களாக மாற்றப்படுவதை பார்வையாளர்கள் இந்த வீடியோவில் காணலாம் , குறிப்பாக வீடியோவின் கடைசி பிரேம்கள் பிரமிக்க வைக்கின்றன, கதாநாயகன் பிரம்மாண்டமாக எழுச்சி அடையும் தருணத்தை, படம் பிடித்து காட்டுகிறது. இது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

