Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaடிரெய்லர் மிரட்டுகிறது! -தயாரிப்பாளர் மதி ஹீரோவாக நடித்துள்ள பிதா பட விழாவில் நடிகர் மணிகண்டன் பாராட்டு

டிரெய்லர் மிரட்டுகிறது! -தயாரிப்பாளர் மதி ஹீரோவாக நடித்துள்ள பிதா பட விழாவில் நடிகர் மணிகண்டன் பாராட்டு

Published on

திரைப்படத் தயாரிப்பாளர் வி மதி நடிகராக அறிமுகமாக, கார்த்திக் குமார் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘பிதா.’ படத்தில் மதியுடன், வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, சென்னையில் நடந்தது.

நிகழ்வில் வி மதி பேசியபோது, ”இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை. இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை. மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் குமார், ”நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர். அமைதியானவர். ஒரு சிறு தோல்வியைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள். ஆனால், மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார். தொடர்ந்து படங்கள் செய்கிறார். இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார், ”இந்த படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. இதில் எனக்கு பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் கஷ்டம் புரிந்தது. மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன். படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன்” என்றார்.

நடிகர்  மணிகண்டன், ”பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள்” என்றார்.

திருமதி சுந்தரவள்ளி, ”தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர், படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநரும் நடிகருமான சரவணன் சுப்பையா நடிகை லஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பாபி மாஸ்டர், நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, நடிகர் குணா, இயக்குநர் சரண், நாஞ்சில் சம்பத், திருமுருகன் காந்தி, கே.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

படக்குழு:
எழுத்து இயக்கம் : வி கார்த்திக் குமார்
தயாரிப்பாளர்கள்: டி பால சுப்ரமணி & சி சதீஷ் குமார்
கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ்
இசை: ரஷாந்த் அர்வின்
ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட்
எடிட்டர் & கலரிஸ்ட் : எம் எஸ் பாரதி
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி
வணிக நிர்வாகி: உமாபதி ராஜா
கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன்
ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம்
ஆடை வடிவமைப்பாளர் – பவித்ரா சதீஷ்
ஆடை: எஸ் பி சுகுமார்
ஒப்பனை: ரஷ்யா
மக்கள் தொடர்பு : AIM சதீஷ்

 

 

 

 

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!