யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், ‘லவ் டுடே’ பிரார்த்தனா நாதன், கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் ‘வானவன்’ மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படம் யோகிபாபுவின் நகைச்சுவையுடன் ஃபேண்டஸி ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலாக தயாராகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மாஸ்குரேட் என்ற மலையாளத்தின் முதல் வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்துள்ளார். விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
படக்குழு:
பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்.)
அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் திரைக்கதை, வசம் எழுத ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வெற்றிக் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.