HomeCinemaநாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'வானரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்திய பரபரப்பு!

நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வானரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்திய பரபரப்பு!

Published on

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் இப்போது ‘வானரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அவரிடம் பேசியபோது, ”பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் விதமாகவும் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது” என்றார்.

பிஜேஷ் நாகேஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் யதார்த்தமாக நடித்திருப்பதால் தமிழ் சினிமா அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கதாநாயகி அக்ஷயா ஒயிலாட்டக் கலைஞராக மிக இயல்பாக நடித்திருக்க, குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாவும், குழந்தை நட்சத்திரமாக பேபி வர்ஷாவும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்களாம்.

லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், எஸ்.எல்.பாலாஜி, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் 30 நாட்களில் நடந்து முடிந்துள்ளது. அதையடுத்து பட வெளியீட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரியளவில் ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கி வரவேற்பு பெற்று வருகிறது.

படக்குழு:
தயாரிப்பு: ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீராம் பத்மநாபன்
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ்
படத்தொகுப்பு: வித்து ஜீவா
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this