HomeCinemaநானியின் பிறந்தநாளில் வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை' டீசர், புதிய படத்தின் அறிவிப்பு... ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

நானியின் பிறந்தநாளில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ டீசர், புதிய படத்தின் அறிவிப்பு… ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

Published on

நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார். தற்போது ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் நானியின் பிறந்தநாளில் வெளியானது. கூடவே, அவர் டி.வி.வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. டீசரும், புதிய பட அறிவிப்பும் நானி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

தற்காலிகமாக ‘நானி32’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் அதிரடியான ஆக்சன் படைப்பாக உருவாகவுள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. அதற்கு தனித்துவமான, புதிரான திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் சுஜித்.

சுஜித் இப்போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக நானியின் இந்த படத்தை இயக்குகிறார்.

நானி நடித்துவரும் சூர்யாவின் சனிக்கிழமை படப்பிடிப்பு முடிந்தபின், ‘நானி32’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில், ‘இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு இந்த லவ்வரிடம் வருவார்’ என்று பதிவிட்டுள்ளார்.

படக் குழு:
எழுத்து, இயக்கம்: சுஜீத்
தயாரிப்பாளர்கள்: டிவிவி என்டர்டெயின்மென்ட் தனய்யா, கல்யாண் தாசரி
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார்

Latest articles

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct) நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னர் ராக் ஸ்டார் அனிருத்!  

'டீகன்ஸ்ட்ரக்ட்' இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

நடிகர் ஆர்யா 'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபற்றி...

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.'...

அஜித் – ஷாலினி நடித்த கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ்!

அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று...

More like this