HomeCinemaசிறுதானிய கேக் வெட்டி பிறந்தநாளை முன்னுதாரணமாக்கிய நடிகர் ஆரி! வழக்கமான கேக் கேன்சர் உருவாக்கும் என்று...

சிறுதானிய கேக் வெட்டி பிறந்தநாளை முன்னுதாரணமாக்கிய நடிகர் ஆரி! வழக்கமான கேக் கேன்சர் உருவாக்கும் என்று பேச்சு.

Published on

மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும், மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நாயகன் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ‘ப்ளாக்’பாண்டி, ஷெர்லி பபித்ரா,கனிமொழி, ‘மைம்’கோபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ராஜசேகர பாண்டியன்.
தயாரிப்பு பணிகளை அருணாச்சலம் மேற்கொள்கிறார்.

இயற்கை உணவை எப்போதும் போற்றும் விதமாக ‘ மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை’ சார்பாக தொடர்ச்சியாக உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆரி அர்ஜுனன், தான் நடிக்கும் படங்களிலும் தான் பங்குபெறும் விழாக்களிலும் அதற்கான முன்னெடுப்பை எடுக்க தவறியதில்லை. அவ்வகையில் இந்த பிறந்தநாளையும் கொண்டாடினார்.

அப்போது பெசிய ஆரி, ”நாம் பிறந்தநாள் கொண்டாடுவது தவறில்லை, கொண்டாட்டங்களில் ‘கேக்’ வெட்டுவதும் தவறல்ல, ஆனால் அத்தகைய கேக் சுகாதாரமானதா, ஆரோக்கியமானதா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் இதுபோல ‘கேக்’ வகைகள் பல்வேறு செயற்கை வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கேன்சர் உள்ளிட்ட பல நோய்களும் வர வாய்ப்புள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பெயரை பார்த்து வைக்கிறோம். நல்ல உடையை வாங்கி தருகிறோம். ஆனால் நல்ல உணவை அறிமுகம் செய்கிறோமா? என்பது தான் கேள்வி. இன்று பலரும் தவறான உணவு பழக்கத்தால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். தயவு செய்து நல்ல கல்வி கொடுப்பது போல் நல்ல உணவையும் கொடுங்கள்” என்று அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this