தமிழ்த் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி.’
வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
புதுமுக நாயகன் ஜெகவீர் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சுசீந்திரன் இமான் இணையும் 10-வது படம் இது. சிட்டி லைட் பிக்சர்ஸ் விக்னேஷ் சுப்ரமணியன் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
கதை கோயம்புத்தூரில் நடக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதையடுத்து, படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
படக் குழு:-
இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு – வி எஸ் ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா
எடிட்டர் – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
ஆடை வடிவமைப்பாளர் – மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி – டி முருகேசன்
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்