HomeCinemaஅசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிக்கும் ‘புளூஸ்டார்' இளைஞர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும்!...

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிக்கும் ‘புளூஸ்டார்’ இளைஞர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும்! -சொல்கிறார் இயக்குநர் ஜெய்குமார்

Published on

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘புளூஸ்டார்.’

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார், தனது முதல் படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இளைஞர்களுக்கு மிகமிக பிடித்த கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஜனரஞ்சகமாக, ஜாலியாக ஒரு படம் எடுத்திருக்கிறோம். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என பல விஷயங்கள் படத்தில் உண்டு.

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம். நடிகர்கள் முழுக்க முழுக்க அரக்கோணம் ஊர் இளைஞர்களாகவே மாறிவிட்டார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருக்கிறது. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார்.

எடிட்டர் செல்வா, படத்தின் கலை இயக்குநர் ஜெய்ரகு, சண்டைப் பயிற்சி ஸ்டன்னர் சாம் என அனைவரது பங்களிப்பும் மிக முக்கியமானது. ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இந்த படம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நெருக்கமான உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். குடும்பத்தோடு பார்க்கும் படமாகவும் இருக்கும்.

படம் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது” என்றார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this