Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaஇந்தியாவின் புகழ்மிக்க இராணுவ அதிகாரி மானெக்ஷாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் சாம் பகதுர் இப்போது ...

இந்தியாவின் புகழ்மிக்க இராணுவ அதிகாரி மானெக்ஷாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் சாம் பகதுர் இப்போது ZEE 5 தளத்தில்!

Published on

சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது.

75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது. ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும். நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது. தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!