Tuesday, October 8, 2024
spot_img
HomeCinemaசத்யராஜ், பிரியா பவானிசங்கர் நடிப்பில், ஃபைனான்ஸியல் திரில்லராக உருவான 'ஜீப்ரா' தீபாவளியின்போது ரிலீஸாகிறது!

சத்யராஜ், பிரியா பவானிசங்கர் நடிப்பில், ஃபைனான்ஸியல் திரில்லராக உருவான ‘ஜீப்ரா’ தீபாவளியின்போது ரிலீஸாகிறது!

Published on

தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான ஃபைனான்ஸியல் திரில்லராக இயக்கியிருக்கும் ‘ஜீப்ரா’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர்.

இவர்களுடன், பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும்  நடித்துள்ளனர்.

படம், வரும் 2024 அக்டோபர் 31-ம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற’செம்பருத்தி’ சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இந்த படத்தினை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

Latest articles

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 11-லிருந்து ஸ்டிரீமாகிறது!

மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான 'வாழை' திரைப்படத்தை வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து...

இந்த படம் இளைஞர்களை கவர்வதோடு அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்கும்! -பிளாக் பட பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பேச்சு 

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள பிளாக் படம் வரும் அக்டோபர் 11-ம்...

நடிகர் கே சி பிரபாத்துக்கு யாமம் படப்பிடிப்பில் ஹார்ட் அட்டாக்! சிம்ஸில் தொடரும் சிகிச்சை.

கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக...

தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற, சென்னை டிடிகே சாலை துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழா!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான...

More like this