HomeMovie Reviewயூத் சினிமா விமர்சனம்

யூத் சினிமா விமர்சனம்

Published on

படிக்கிற வயதில் படிக்காமல், காதல் மோதல் என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிற மாணவன் ஒருவன் என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறான் என்பதே ‘யூத்’தின் கதை.

மாணவனாக கென் கருணாஸ். ஸ்கூல் ஸ்டூடண்ட் கேரக்டரில் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறார். லட்சணமாக முகமும், சிரிப்பும் கவர்கிறது. 90 % ஜாலியாக, 10 % நெகிழ்ச்சியாக நடித்திருக்கிறார்.

விஜய் பட டைட்டிலை எடுத்துக்கொண்டு தனுஷ், சிம்பு ரெபரன்ஸ் கலந்துகட்டி படத்தை இயக்கிய விதமும் பக்கா.

கென்னுக்கு அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று  ஜோடிகள். மூவருக்கும் நடிப்பில் சமமான வாய்ப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அசத்துகிறார்கள்.

மனதில் பாசத்தை வைத்துக்கொண்டு பேச்சிலும் நடவடிக்கைகளிலும் டெரராக நடந்துகொள்கிற தந்தை கதாபாத்திரத்துக்கு கச்சிதமான நடிப்பால் உயிரூட்டியிருகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.

இப்படி ஒரு அம்மா இருந்தால் அந்த பிள்ளை உலகமகா லக்கி என்று சொல்லலாம். அப்படியொரு அம்மாவாக தேவதர்ஷினி, கண்டிப்பும் கனிவும் கலந்த பிரின்ஸிபலாக நளினி என மற்றவர்கள் தேவைக்கேற்ப நடித்திருக்க, ஜி வி பிரகாஷ் இசையில் அப்படி திரும்பினால் ஒன்று இப்படி திரும்பினால் ஒன்று என ஏகப்பட்ட பாடல்கள் வந்துகொண்டிருக்க ‘முட்ட கலக்கி’, ‘லவ்வ சொல்லிட்டாளே’ பாடல்கள் உற்சாகம் பரப்புகின்றன. பின்னணி இசையில் பரவசம் சற்றே தூக்கல்.

விக்கியின் ஒளிப்பதிவு தரம்.

‘பள்ளிப் பருவத்தில் காதல் வரும், போகும்; அதையெல்லாம் கடந்து படிக்கிற படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு பலமாக அமையும்’ என்ற மெசேஜ் சுமந்திருக்கும் இந்த படத்தின் இளமை துள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜென் சி தலைமுறைக்கு வைப் மெட்டீரியல்!

இயக்குநராகவும் ஹீரோவாகவும் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கும் 23 வயது கென் கருணாஸுக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது!

Rating 3.5 / 5

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this