Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaகணேஷ் - ரமேஷ் கூட்டணியின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் முதல் காணொளி வெளியீடு!

கணேஷ் – ரமேஷ் கூட்டணியின் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் முதல் காணொளி வெளியீடு!

Published on

கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.

 

ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கிறது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், ” இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் ‘புஷ்பக விமானம் ‘ எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌

‘புஷ்பக விமானம்’, ‘மழைக்கால ராகம்’ போன்ற படங்களை தயாரித்த விக்யாத், ‘யுவர் சின்சியர்லி ராம்’ எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு… இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது” என்றார்.

நடிகர் கணேஷ் பேசுகையில், ” கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, ‘யுவர் சின்சியர்லி ராம்’ எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் – தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

‘யுவர் சின்சியர்லி ராம்’ படத்தில் முதல் தோற்றம் வெளியாகி குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையான கலைஞர்களுடன் சாண்டல்வுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ உருவாகி வருகிறது. இயக்குநர் விக்யாத் இயக்கத்தில் ரமேஷ் – கணேஷ் கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படம்- பெரிய திரையில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும்.

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!