HomeCinemaஉற்சாகமாய் நடந்த 'யூத்' படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

உற்சாகமாய் நடந்த ‘யூத்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

Published on

கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கிய ‘யூத்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்று 50 கோடி வசூலைக் கடந்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அதையடுத்து வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய கென் கருணாஸ் ”எல்லாருக்கும் வணக்கம். முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.
இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.
டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள்.
இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது.
மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது.
இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம்.
உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.
விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலையாண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.
ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.
முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.
ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம்.
நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார்.  தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம்.
சூரஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி” என்றார்.

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...