மஞ்சப்பை, கடம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த தேவாவின் மகள் யோமிதா மாவட்ட, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு 23 தங்கப் பதக்கம், 4வெள்ளிப் பதக்கம், 2 விருது, 3தனிப்பட்ட CHAMPIONSHIP TROPHY பெற்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மதுரையில் SPEED SKATING FEDRATION OF INDIA- (SSFI) நடத்திய 24வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் யோமிதா UNDER-8 பிரிவில் பங்கேற்று 200 மீட்டரிலும், 400 மீட்டரிலும் இரண்டு பிரிவிலும் தங்க பதக்கமும் பெற்று தனிப்பட்ட சாம்பியன் ஷிப் கோப்பையையும் (INDIVIDUAL CHAMPIONSHIP TROPHY) கைப்பற்றினார்.
இவர் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக இந்தோனேசியாவில் கலந்து கொள்ள உள்ளார்.