தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவின் முன்னணி காலணி பிராண்டாக திகழும் ‘வாக்கரூ இன்டர்நேஷனல்’ காலணிகளுக்கான ‘வாக்கரூ ஸ்டோர்’ என்னும் புதிய ஷோரூமை மதுரை காட்ராபாளையத்தில் தனது சேனல் பார்ட்னர் நிறுவனமான பாரத் ஷு கம்பெனி திறந்துள்ளது.
2000 சதுர அடியில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான காலணி ரகங்கள் இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. காட்ராபாளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வாக்கரூ ஸ்டோரில் நவநாகரீக ஈவிஏ காலணிகள் மற்றும் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தும் காலணிகள், ஷூ ரகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விதவிதமான டிசைன்களில் ஏராளமான காலணி ரகங்கள் உள்ளன. பண்டிகைக் காலத்தில் புதிய காலணிகளை வாங்க விரும்புபவர்கள் மற்றும் ஷாப்பிங் செய்பவர்களை வெகுவாக கவரும் வகையில் புதிய ஸ்டோர் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டோர் குறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் கூறுகையில், இந்த பிரத்தியேக ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். தீபாவளி பண்டிகைக்காக நாங்கள் அறிமுகம் செய்துள்ள பல்வேறு புதிய ரகங்களை பார்க்க காட்ராபாளையம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதி மக்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம் என்று தெரிவித்தார்.
வாக்கரூ பற்றி: அனைவருக்கும் புதுமையான நவீன டிசைன்களில் காலணிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் உள்நாட்டு பிராண்டான வாக்கரூ கடந்த 2012–ம் ஆண்டு துவக்கப்பட்டது. விளையாட்டிற்கு பயன்படுத்தும் காலணிகளை இந்நிறுவனம் 499 ரூபாய்க்கு அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான டிசைன்களை வழங்குவதில் இந்நிறுவனம் முன்னோடியாக இருந்து வருகிறது. பிளிப் ப்ளாப்ஸ் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் ஷூ ஆகிய புதிய அறிமுகங்கள் மூலம் இதன் காலணி ரகங்கள் மேலும் விரிவடைந்துள்ளன. இது வாக்கரூ & வாக்கரூ+ என்ற துணைப் பிராண்டுகளைக் கொண்டுள்ளது.
2022-2023–ம் நிதியாண்டில், வாக்கரூ 2088 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட டீலர்களும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும் உள்ளன.
இந்நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தனது தொழிற்சாலைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் மறுசுழற்சி மற்றும் காடு வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.