Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaமேடையில் நடனமாடிய சீயான் விக்ரம்; பெங்களூருவில் நடந்த 'வீரதீர சூரன்' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில்...

மேடையில் நடனமாடிய சீயான் விக்ரம்; பெங்களூருவில் நடந்த ‘வீரதீர சூரன்’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் உற்சாகம்!

Published on

சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து நேற்று பெங்களூரூ மந்த்ரி ஸ்கொயர் மாலில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் சீயான் விக்ரம்  பேசுகையில், ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களைப் போல் நடிக்க வேண்டும். அதே சமயத்தில் ‘பிதாமகன்’ போலும் இருக்க வேண்டும் என நினைத்து, அதாவது உணர்ச்சி பூர்வமான படத்தை கமர்சியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி ஒரு கதைக்காக காத்திருந்தேன். அந்த கதை தான் இந்த ‘வீர தீர சூரன்’ படத்தின் கதை.

எஸ். யூ. அருண் குமாரின் ‘சித்தா’ படத்தை பார்த்திருப்பீர்கள். அவருக்கு அது போன்றதொரு உணர்வுபூர்வமான படத்தையும் இயக்கத் தெரியும். அதே போல் ‘சேதுபதி’ போன்ற படத்தையும் இயக்கத் தெரியும். அவர் இந்த படத்தில் இந்த இரண்டையும் கொண்டு வந்திருக்கிறார். இந்த திரைப்படம் ரொம்ப Raw & Rustic . ஒரு மாஸான ஃபிலிம். ஆனால் இது வேற மாதிரியாக இருக்கும். அதாவது மாஸாகவும் இருக்கும். ரியலாகவும் இருக்கும்.

இதைப் பற்றி பில்டப் செய்து சொல்ல விரும்பவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ இது போன்ற கதையை ரியலாக செய்வதற்கு எங்களுக்கு நிறைய பெர்ஃபாமர்ஸ் தேவைப்பட்டார்கள். இதனால் எஸ். ஜே. சூர்யாவை தேர்வு செய்தோம். அவரைத் தொடர்ந்து துஷாரா விஜயனையும், சுராஜையும் தேர்வு செய்தோம். பிருத்வி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள்.

நீங்கள் படம் பார்க்கும்போது இதை தெரிந்து கொள்வீர்கள். இந்தப் படம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தில் பாடலாக இருந்தாலும்… சண்டை காட்சியாக இருந்தாலும்..
அதனை ராவாக உருவாக்கியிருக்கிறோம். சின்னதாக ஒரு முயற்சியை செய்திருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி” என்றார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

”இந்த திரைப்படம் சினிமா இலக்கணத்தை மீறி இருக்கும். படத்தில் என்னுடைய ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும்.. படத்தின் ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும். இன்ட்ரவல் பிளாக் வேற மாதிரி இருக்கும். வழக்கமான ஃபார்முலாவை உடைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறோம். புது முயற்சிக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தப் படத்தில் கேரக்டர்களின் பெர்ஃபாமன்ஸ் – ஃபைட் சீக்குவன்ஸ்.. சாங்ஸ் … எல்லாம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ” இந்தப் படத்தின் டைட்டிலை ‘காளி’ என்று வைக்க நினைத்தோம். சமீபத்தில் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மீண்டும் ‘காளி’ என பெயர் வைத்தால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக.. ‘வீர தீர சூரன்’ என பெயர் வைத்தோம். காளி எனும் கதாபாத்திரத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும். ” என்றார்.

இந்நிகழ்வில் அந்த வளாகத்திற்குள் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் சீயான் விக்ரம் உற்சாகம் குறையாமல் பதிலளித்தார். அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரும் காத்து எம்மேல..’ என்ற பாடலையும் பாடி பார்வையாளர்களை அசத்தினார். அதன் பிறகு மேடையில் நடனமும் ஆட ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!