அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி நிகில் பற்றி கூறும்போது, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரிந்துள்ளனர்.
நிகில் தனது வாய்ப்பை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். நிகிலை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்துள்ள நிகிலுடைய நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். நான் முன்பே குறிப்பிட்டது போல், நடிகர்களை தேர்வு செய்யும் விஷயத்தில் அஜித்குமார் தலையிடுவதில்லை. தனது கதாபாத்திரத்திற்காக நிகில் கொடுத்த அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடிப்பைப் பார்த்த பிறகு அஜித்குமார், நிச்சயம் நிகிலின் நடிப்பு பார்வையாளர்களால் பேசப்படும் என்று பாராட்டினார்” என்றார்.