கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இயக்கும் படம் ‘விக்ரம் கே தாஸ்.’
திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம், விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை.
அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது. விரைவில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கி நடக்கவுள்ளது.
‘எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் எட்டாவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது.
படக்குழு:-
இசை: பிரித்வி
பாடல்கள்: சீர்காழி சிற்பி
ஒளிப்பதிவு: விஜய் ஜெ.ஆனந்த்
எடிட்டிங்: கிரேசன்
சண்டைப் பயிற்சி: பயர் கார்த்திக்