Monday, March 24, 2025
spot_img
HomeCinemaநானும் சந்தோஷ் நாராயணனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் பாடல்கள் நன்றாக இருப்பதற்கு காரணம்!...

நானும் சந்தோஷ் நாராயணனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் பாடல்கள் நன்றாக இருப்பதற்கு காரணம்! –வாழை’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு

Published on

மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்கியிருக்கும் நான்காவது படம் ‘வாழை.’ புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியபோது, ”சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலிருந்து மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணியில் பாடல்கள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் அதற்குக் காரணம். இந்த படத்திலும் அட்டகாசமான பாடல்களைத் தந்துவிட்டார்.

கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் எல்லோருமே மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இது என்னுடைய வாழ்க்கை கதை. நான் வாழ்க்கையில் என்ன கஷ்ட பட்டேனோ, அதை நீங்கள் இந்த படத்தில் பட்டால் தான், அந்த வலி தெரியும் என்று சொல்லித் தான் அவர்களை நடிக்க வைத்தேன். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.

எனக்கு முழு சுதந்திரம் தந்து, நான் அடுத்த படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், இந்த படத்தைத் தயாரிப்பதில் முழுமையான சுதந்திரத்தைத் தந்த, ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எனது நன்றிகள். என் மனைவி திவ்யா இந்த படம் மூலம் தயாரிப்பாளராக அவர் பெயரும் இந்த படைப்பில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஏனென்றால் இது என்னுடைய வாழ்க்கை கதை, என்னுடைய வாழ்க்கைக் கதையில் திரைப்படமாக வரும் போது, அதில் அவர் பெயர் வருவது மிக முக்கியம் எனக்கருதுகிறேன். அவர் ஒரு சினிமா ரசிகையாக இருந்தார். அதுதான் அவரையும் என்னையும் இணைத்தது.

என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை. இந்த படத்தைப் பார்த்து முடிக்கும் போது, உங்களுக்கு என்னைப் பற்றி முழுதாக புரியும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ”வாழை பார்த்தும் வியந்து விட்டேன். இந்த படம் தமிழ் சினிமாவின் 5 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். இங்கிருக்கும் கலைஞர்கள் எல்லோரும் மக்களிடம் தாக்கத்தை உண்டு செய்யும் கலைஞர்களாக வளர்ந்திருக்கிறோம், கலை மூலம் மிகச்சிறந்த படைப்புகளை உங்களுக்குத் தருவோம். 50 படங்களை நான் கடந்திருக்கிறேன். நீங்கள் தந்த வரும் ஆதரவிற்கு நன்றி” என்றார்.

நிகழ்வில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் மில்ராய் மற்று, கிருஷ்ணன் குட்டி, நடிகை திவ்யா துரைசாமி, நடிகை நிகிலா விமல், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் ஜெ எஸ் கே, இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் ராம், திங்க் மியூஸிக்’ மணி ஆகியோரும் பேசினார்கள்.

படக்குழு:-
எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ்
தயாரிப்பாளர் – திவ்யா மாரிசெல்வராஜ், மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – சூரிய பிரதமான்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
பாடல்கள் – யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ்
உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா
ஒலி வடிவமைப்பு – சுரேன் ஜி
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
உடைகள் – ரவி தேவராஜ்
மேக்கப் – ஆர் கணபதி
விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...