Tuesday, July 8, 2025
spot_img
HomeCinemaவேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம்!

வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம்!

Published on

சென்னை, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) கல்வி நிறுவனம் 14-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு ஏப்ரல் 13; 2024 அன்று மாலை பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். சமூகத்திற்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர்.

அந்தந்தத் துறைகளில் வல்லுநர்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையே இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல், திரு ராம் சரண் கொனிடேலா, திரைப்பட நடிகர், Dr. GSK வேலு, Trivitron Healthcare இன் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் பத்மஸ்ரீ. ஷரத் கமல் அச்சந்தா, இந்திய தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர், சென்னை.

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, டாக்டர். ஐசரி கே. கணேஷ், விஸ்டாஸ் நிறுவனர்- அதிபர் மற்றும் நடிகர் ராம்சரண் கொனிடேலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். ராம்சரண் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் ராம்சரண் கொனிடேலா இந்த அங்கீகாரத்திற்கு காரணம் தன்னுடன் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் தான் என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பிற்காக இயக்குநர் ஷங்கருக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த டாக்டர் பட்டத்திற்காக தனது குடும்பம் குறிப்பாக, தனது அம்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியதை குறிப்பிட்டார்.

கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ராம்சரண் கொனிடேலாவை தேர்ந்தெடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், அவரின் அபாரமான திறமையை குறிப்பிட்டு, இன்னும் பெரிய மைல்கற்களை சினிமாவில் அவர் அடைவார் என்றார்.

Latest articles

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்கப் போகிறேன்; அதற்கு முன்னோட்டமாக ‘அகம் பிரம்மாஸ்மி’ பாடலை உருவாக்கியுள்ளேன்! -சொல்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்களைப் பயன்படுத்தி 'அகம் பிரம்மாஸ்மி' என்ற ஆல்பம் பாடலை எழுதி, இசையமைத்து,...

More like this

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள...

சென்னை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை… அனிருத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர், பாடகர், இசை கலைஞரான 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில்...
error: Content is protected !!