Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaடீசரை வெளியிட தடை விதித்தார்கள். சென்சாரில் 54 கட் கொடுத்தார்கள்! -தடைகளைத் தாண்டி 'வா பகண்டையா'...

டீசரை வெளியிட தடை விதித்தார்கள். சென்சாரில் 54 கட் கொடுத்தார்கள்! -தடைகளைத் தாண்டி ‘வா பகண்டையா’ படத்தை வெளியிடும் இயக்குநர் பி.ஜெயக்குமாரின் விரிவான பேட்டி

Published on

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை இழுத்துப் போட்டு வெளுத்து வாங்குகிற விதத்தில் உருவாகி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிற படம் ‘வா பகண்டையா.’

டிரெய்லர் வெளியானபோது அதிலிருந்த வசனம், பாடல் வரிகள் சர்ச்சைக்குள்ளாகி, இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜெயக்குமார் சிலரால் மிரட்டல்களைச் சந்தித்தார். பின்னர் இந்த படம் சென்சாரிலும் சிலபல சிக்கல்களைச் சந்தித்தது. அதையெல்லாம் கடந்து ஒருவழியாக வரும் ஏப்ரல் 12-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

வா பகண்டையா இயக்குநர் ஜெயக்குமார்

படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் இத்தனை பிரச்சனைகள்? இப்படியான கேள்விகளோடு இயக்குநரை சந்தித்தோம்…

சாதிப் படமாக எடுத்ததால்தான் தொடர்ச்சியாக பிரச்சனைகள் உருவாகிறதா?

”எதை வைத்து நான் சாதிப்படம் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள்? டிரெய்லரை வைத்து சொல்கிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நான் எடுத்திருப்பது சமூக நீதி பேசுகிற படம். சாதி கூடாது என்று வலியுறுத்துகிற படம். அரசியலும் பேசியிருக்கிறேன்.”

அரசியல் பேசுவதால்தான் பிரச்சனையா?

”அரசியல் பேசுவது மட்டுமில்லை; படத்தில் நம்முடைய பிரதமர் மோடி சாயலில் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறேன். அதை வைத்து பாஜக.வுக்கு ஆதரவான படம் என்ற கோணத்தில் பேச்சு எழுந்தது. படத்தில் ‘சாதி என்பது மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு மாதிரி’ என்ற வசனம் வருகிறது. அதை உண்மையில் மாம்பழத்தை சின்னமாக கொண்ட கட்சியை மனதில் வைத்து எழுதவில்லை. கதைக்கு அதைவிட சரியான சரியான உதாரணம் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. அதை புரிந்துகொள்ளாமல், அதையும் பிரச்சனையாக்கினார்கள். பாடல் வரிகளில் ஈழம் என்ற சொல் வருவதையும் பிரச்சனையாக்கினார்கள்.

சிலர் தங்களுக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்றெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள். நான் அதற்கெல்லாம் சம்மதிக்கவில்லை. கருத்து எதுவானாலும் என் படத்தை மக்கள் பார்த்து முடிவெடுக்கட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

மோடி சாயலில் உள்ள நபர்தான் படத்தின் ஹீரோவா?

”இல்லை. அவர் கெஸ்ட் ரோலில்தான் வருவார். ஆனால், அவருடையது முக்கியமான கதாபாத்திரம்.”

சென்சாரில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தீர்கள்?

”படம் சமகால சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுவதால், அரசியல் வசனங்கள் இருப்பதால் 54 கட் கொடுத்தார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் டீசருக்கு தடை விதித்துள்ளார்கள். அதற்கெல்லாம் பிரதமர் சாயலில் இருப்பவர் நடித்திருப்பதும் ஒரு காரணம். டீசரை சமூக வலைதளங்களில்கூட வெளியிட முடியாத சூழ்நிலையில், 30 விநாடிக்குள் இருக்கும்படியான கிளிப்பிங்ஸ் சிலவற்றை டிவி சேனல்களில் விளம்பரப்படுத்தி படம் வருவதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.”

படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு ஏதும் வந்துள்ளதா?

”’இல்லை; இதுவரை அப்படியான எந்த எதிர்ப்பும் வரவில்லை. தமிழ்நாடு முழுக்க 200 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடக்கிறது.”

உங்கள் படத்தை ஏன் பார்க்க வேண்டும்’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

”படம் சமூக அவலங்களைப் பேசுகிறது. மக்களில் பலரும் சந்திக்கிற பிரச்சனைகளைப் பேசுகிறது. வெறுமனே அரசியல் பேசுவது, காரசாரமாக கருத்து சொல்வது என்று சுருக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்துள்ளேன்.

படம் சமூக அவலங்களைப் பேசுகிறது. மக்களில் பலரும் சந்திக்கிற பிரச்சனைகளைப் பேசுகிறது. வெறுமனே அரசியல் பேசுவது, காரசாரமாக கருத்து சொல்வது என்று சுருக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்துள்ளேன்.

ஹீரோ, ஹீரோயின் புதியவர்கள் என்றாலும் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணின்னு பிரபலமான நடிகர்கள் நடிச்சிருக்காங்க.

எஸ்.பி.பி. அவர்கள் கடைசியாக பாடிய இரண்டு பாடல்கள் உட்பட படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. அத்தனை பாடல்களுக்கும் சீனியர் மியூஸிக் டைரக்டர் எஸ்.ஏ.ராஜ்குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார். எல்லா பாடல்களும் கதைக்களத்துக்கு பொருத்தமாக இருக்கும்; மக்களும் ரசிப்பார்கள். இப்படி ஒரு கமர் ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் இருப்பதால் என் படத்தை பார்க்கலாம்.

பிரச்சனைகளைப் பேசிவிட்டுக் கடந்துபோகாமல் பிரச்சனைகளுக்கான தீர்வையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.”

இயக்கி, தயாரித்த முதல் படத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து விட்டீர்கள். அடுத்தடுத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

”எண்ணம் மட்டுமல்ல; கதை அது இதுவென எல்லாமும் தயாராக இருக்கிறது. ஆளுமை என பெயரும் வைத்தாயிற்று. சீக்கிரமே ஷூட்டிங் போக திட்டமிடுகிறோம். இந்த முறை முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை கொடுக்கவிருக்கிறேன். அதுவும் என் சொந்த தயாரிப்பிலேயே உருவாகிறது. சமூகத்துக்காக ஒரு நல்ல விஷயத்தை செய்றப்போ பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளிக்கத் தயாரா இருக்கிறேன்.”

 

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!