வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘VR07′ என தலைப்பு வைக்கப்பட்டு, கடந்த ஜூலை 05, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கியது.
சபரிஷ் நந்தா இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, அக்டோபர் 11, 2023 அன்று முடிவடைந்துள்ளது. படம் அனைவராலும் விரும்பப்படும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ‘ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ்’, இர்பான் மாலிக்கின் ‘எம்பரர் என்டர்டெயின்மென்ட்’ இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் வெளியீடுகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.