Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaபிரபல நிறுவனங்களுடன் நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்!

பிரபல நிறுவனங்களுடன் நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்!

Published on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ( VVVSI ) வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருவது நீங்கள் அறிந்தது.

இப்போது விஜய்சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED மற்றும் AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD இணைந்து 20-மார்ச் மற்றும் 21- மார்ச் ஆகிய இரண்டு நாட்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர்பகுதியில் நடைபெற்றது.

இந்த முகாம் மூலம் 1800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது , 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கினர்.

மேலும் இந்த முகாமில் சென்னை இந்திராகாந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளும் பங்கு பெற்றது , அதன் மூலம் இரத்ததான உதவியானது பொது மக்கள் பயன் பெரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கு பெற்று தன்னை இணைத்து கொண்டு குருதிக் கொடை அளித்த கொடையாளர்கள் , தன்னார்வலர்களுக்கும் & மற்ற உதவியை செய்தவர்களுக்கும் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD மற்றும் NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED ஆகியோர் இணைந்து நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!