Sunday, January 19, 2025
spot_img
HomeCinemaவள்ளியம்மை அம்மாள் கிராமப்புற மருத்துவ உதவித் திட்டம் 5ம் ஆண்டு துவக்க விழாவில் சமூக மருத்துவ...

வள்ளியம்மை அம்மாள் கிராமப்புற மருத்துவ உதவித் திட்டம் 5ம் ஆண்டு துவக்க விழாவில் சமூக மருத்துவ சொற்பொழிவு!

Published on

வள்ளியம்மை அம்மாள் கிராமப்புற மருத்துவ உதவித் திட்டம் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சமூக மருத்துவ சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் வள்ளியம்மை அம்மாள் கிராமப்புற மருத்துவ உதவித் திட்டம் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி வள்ளியம்மை அம்மாள் நினைவு சமூக மருத்துவ சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.

இதில் காசநோய் எதிரான போராட்டம் அதில் இந்திய நாட்டின் பயணம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவம் மற்றும் சுகாதரா துறையின் துணை வேந்தர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சுவாச மருத்துவ குறைபாடு துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ரமேஷ், எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி துறையில் நுரையீரல் நிபுணர் தலைவர் டாக்டர் நலினி ஜெயந்தி, மற்றும் நுரையீரல் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி துறையில் நுரையீரல் நிபுணர் தலைவர் டாக்டர் நலினி ஜெயந்தி காசநோய் என்பது ஒரு கிருமி, காசநோயை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காச நோய் மிகவும் குறைந்துள்ளது. அதற்கு காரணம் கொரோனா தான் கொரோனா கலத்தில் நாம் முக கவசம், நம்மை நாம் சுத்தமாக வைத்து கொள்வது, சமுக இடைவெளி என பல வழி முறைகளை பின்பற்றியதால் காச நோய் குறைந்து உள்ளது. தொடர்ந்து இருமல், சளி, மற்றும் சளியல் இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் காச நோய்க்கான அறிகுறிகள் ஆகும், மேலும் இரும்பும் போது கை குட்டையை வைத்து இரும வேண்டும், ஆங்காங்கே சளியை துப்பக்கூடாது என கூறினார்.

முதியவர்களுக்கு தொடர் இருமல் இருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், அவர்களிடம் சிறுவர்களை அனுப்ப கூடாது. முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் காச நோயாக இருந்தால் எளியதாக பரவ வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் காச நோய்காக ஒரு லட்சம் நபரை பரிசோதித்தால் அதில் 138பேருக்கு காச நோய் கண்டறியப்படுகிறது. இதனால் காசநோய் தடுப்பதற்க்கு முழுமையாக சிகிச்சைகள் பயண்படுத்திக் கொள்ள வேண்டும், சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்ளததால் நோய் பரவலை தடுக்க முடியாது.

இந்த காச நோயை தடுப்பதற்க்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறினார்.
இதனைதொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சுவாச மருத்துவ குறைபாடு துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ரமேஷ் கூறிகையில் இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்து, என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. காச நோய் காற்றில் பரவகூடியவை, அதனை தடுக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும், காச நோய் தடுப்பு போராட்டத்தில் உலக சுகாதாரம் முதல் பொது மருத்துவ சுகாதாரம் வரை ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பரவகூடிய நோய்களில் இருந்து நான் சுயகட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

காசநோயால் பாதிக்கபட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும், இந்த காசநோய் இரண்டு வகைப்படும், ஒன்று குணபடுத்த முந்தவை மற்றொன்று சிகிச்சைக்கு பின் குணபடுத்த முடியாதவை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் காச நோய்யை குணபடுத்த முடியாது என்பதனை சிகிச்சை துவங்கியதில் இருந்து சுமார் 9மாதங்களுக்கு பின் தெரியவரும். ஆனால் தற்போது சிகிச்சை வளர்ச்சியில் காசநோய் கண்டரிய இரண்டு மணி நேரம் போது என கூறினார். காசநோயும் கொரோனா தொற்று போன்று தான். நாம் அனைவரும் சுய கட்டுடன் இருந்தால் நிச்சையம் நோயை தடுக்க முடியும். என கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக வள்ளியம்மை அம்மாள் கிராமப்புற மருத்துவ உதவித் திட்டம் கீழ் சுமார் 2ஆயிரம் நபர் களுக்கு மருத்துவ அட்டை வழங்கப்பட்து. மேலும் நுரையீரல் துறை சார்ந்த மாணவர்கள் காசநோய் பரவலையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக செய்து காண்பித்தனர்.

Latest articles

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி...

More like this

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...