Tuesday, September 10, 2024
spot_img
HomeCinemaசிரஞ்சீவியின் புதிய படம் ‘விஸ்வம்பரா.' பொங்கல் தினத்தில் தலைப்பை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு!

சிரஞ்சீவியின் புதிய படம் ‘விஸ்வம்பரா.’ பொங்கல் தினத்தில் தலைப்பை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு!

Published on

மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் விஷுவல் விருந்தளித்தார். இந்த ஆண்டு மெகாஸ்டாருக்கு எந்த திரையரங்கு வெளியீடும் இல்லை என்றாலும், அவரது பிரம்மாண்டமான திரைப்படமான #Mega156 இன் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை அற்புதமான க்ளிம்ப்ஸேவுடன் வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தியை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

 

தற்செயலாக விழும் மாயாஜாலப் பெட்டியை யாரோ ஒருவர் பூட்டி வைக்க, ஒரு பரலோக உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்வதில் இருந்து இந்த கிளிம்ப்ஸே வீடியோ தொடங்குகிறது. அப்பெட்டி கருந்துளை வழியாகச் சென்று சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இறுதியாக பூமியை அடைகிறது, இது ஒரு பெரிய அனுமன் சிலையுடன் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது, ஆனால் மாயப் பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, படத்தின் தலைப்பு “விஸ்வம்பரா” என கண்களுக்கு விருந்தாக விரிகிறது.

பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையிலான இந்த வீடியோவில் காட்டப்படும், மாயாஜால பெட்டியின் பயணம், நாம் காணப்போகும் சினிமா அனுபவத்தைப் பற்றிய சிறு தெளிவைத் தருகிறது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமாக, விஸ்வம்பரா எனும் தலைப்பு வெகு கவர்ச்சிகரமாக உள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 சங்கராந்தி விருந்தாக திரைக்கு வருமென, தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

படக்குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் 'தில்ராஜா.' சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார்,...

தங்கலானை கொண்டாடும் வட இந்திய மாநிலங்கள்… மகிழ்ச்சியில் படக்குழு.

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க,  பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'தங்கலான்' தமிழ்,தெலுங்கு, மலையாளம்...

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

ஷபீர் கல்லரக்கல் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர்...

தலைப்பிலும், அறிவிப்புகளிலும் அழகுத்தமிழ்… மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்

அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி, இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும்...

More like this

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் 'தில்ராஜா.' சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார்,...

தங்கலானை கொண்டாடும் வட இந்திய மாநிலங்கள்… மகிழ்ச்சியில் படக்குழு.

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க,  பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'தங்கலான்' தமிழ்,தெலுங்கு, மலையாளம்...

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

ஷபீர் கல்லரக்கல் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர்...