இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் மிகமிக பிஸியான வலம் வருகிறார். அவரது இசையமைப்பில் வெளிவரும் படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகி அவரது இசைக்கு பெரியளவிலான அங்கீகாரத்தைத் பெற்று தருகிறது.
துல்கர் சல்மான் நடிக்க, அவர் இசையமைத்த ‘சீதா ராமம்’ சைமா விருது பெற்றுள்ளது. சித்தார்த் நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அந்த உற்சாகத்தில் இருந்தவரிடம் அடுத்தடுத்த படங்கள் பற்றி கேட்டபோது, ”நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் ‘திரு மாணிக்கம்’ படத்திற்கு இசையமைக்கிறேன்.
‘குக்கு எஃப் எம்’ என்ற ஆப் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அதில் சமீபத்தில் வெளியான ‘லாக்கப்’ என்ற ஆடியோ புத்தகத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன் சோழ தேசத்தை ஆட்சி செய்த அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதை ஒன்பது எபிசோடுகளாக வரவிருக்கிறது. அந்த ஆடியோ புத்தகத்தை கண்ணை மூடி கேட்டால், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது பார்ப்பதுபோல் அதாவது பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதுபோல் உணரவைக்கும். அதற்கு இசையமைக்கிறேன். இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன். அது குறித்த தகவல்களை விரைவில் பகிர்கிறேன்”என்றார்.