HomeGeneralசூர்யாவை புத்தம் புதிய சக்தியாக காட்சிப்படுத்தும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திலிருந்து 'தி ஒன் ரூல்'...

சூர்யாவை புத்தம் புதிய சக்தியாக காட்சிப்படுத்தும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திலிருந்து ‘தி ஒன் ரூல்’ பாடல்! 

Published on

‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர், தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.
கவர்ச்சியான இசை-  கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக ‘தி ஒன் ரூல்’ உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்… கம்பீரத்தையும்… கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் – சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாடலாகவும்.. தீப்பற்ற வைக்கும்… பொறி பறக்கும் …பாடலாகவும் அமைந்திருக்கிறது.
இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது தாளம் போட வைக்கும் இசையில் உருவான மற்றொரு வெற்றி பாடலாக இருக்கிறது.  இந்தப் பாடலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் & பாடகர் கானா காதர் இப்பாடலை எழுதி, பாடியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்து, உடனடியாக வசீகரிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும்… இந்தத் திரைப்படத்திற்கு.. திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு புதிய தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.‌
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் – ஃபார்ச்சூன் ஃபோர் ஆகிய நிறுவனங்களின் சார்பில்  சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து, ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம்-  சுதந்திர தின வார இறுதியில்… ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this